’கிளாப்’ - ஆதி, ஆகன்க்ஷா சிங்
’கிளாப்’ - ஆதி, ஆகன்க்ஷா சிங் 
சினிமா

ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது ஆதியின் ’கிளாப்’

காமதேனு

ஆதி நடித்துள்ள ’கிளாப்’ படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழில் ’மிருகம்’ படத்தில் அறிமுகமானவர் ஆதி பினிஷெட்டி. தொடர்ந்து, ஈரம், அய்யனார், மரகத நாணயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், லிங்குசாமி இயக்கத்தில், ராம் நாயகனாக நடிக்கும் 'தி வாரியர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஆதி, ஆகன்க்ஷா சிங்

இந்நிலையில் இவர் நடித்துள்ள ’கிளாப்’ படம், நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. இதில், ஆதியுடன் ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஆதி தடகள வீரராக நடித்துள்ளார். பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகின்றனர்.

SCROLL FOR NEXT