உழவு

எல்லையோர விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி#TNBudget2022

காமதேனு

தமிழக வேளாண் பட்ஜெட்டில் தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரியில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மொத்த காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்தே அதிகளவிலான காய்கறிகள் நம் அண்டை மாநிலமான கேரளத்திற்கு செல்கிறது. கேரளம் அரிசி தொடங்கி காய்கறிவரை தனது அனைத்து உணவுத்தேவைகளுக்கும் தமிழகத்தை சார்ந்தே இருக்கிறது. கேரளத்தின் எல்லையோர தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் கேரளம் சென்று வருகின்றன.

அதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள் மட்டும் இல்லாமல், தோவாளை மலர் சந்தையில் இருந்து பூக்களும் அதிகளவில் கேரளம் செல்கிறது. இந்நிலையில் தேனி, கோவை, குமரியில் நடப்பாண்டில் மொத்தக் காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது எல்லையோர விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT