உழவு

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்#TNBudget2022

காமதேனு

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசுகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. வேளாண் தொழிலை உச்சத்திற்கு அழைத்துச் செல்ல நிதிநிலை அறிக்கை திட்டங்கள் உதவும். கால நிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மாற்றுப்பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும். 2021-22ல் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. தட்டுப்பாடின்றி உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்" என்று கூறினார்.

SCROLL FOR NEXT