உழவு

அயிரை, செல் கெண்டை வளர்ப்புக்குத் தனித்திட்டம்#TNBudget2022

காமதேனு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மீன் வளம் தொடர்பாக சொன்ன அறிவிப்புகள் வருமாறு:

வலைவீசி மீன்பிடிக்கும் மீனவர்கள் நாட்டிற்கு பெருமளவில் அந்நிய செலாவணி ஈட்டித் தருகிறார்கள். உவர் நீர் வளர்ப்பில் அதிக ஈடுபாடு காட்டும் தமிழ்நாடு இனி நன்னீர் மீன் வளர்ப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தும். இதற்காக பண்டை குட்டைகளில் மீன்வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தும். நாட்டின மீன் வளர்ப்பு ஏற்கெனவே இருந்த நிலையில் இருந்து வெகுவாக குறைந்து வருகிறது. நாட்டின் மீன்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு புதிய திட்டங்களைத் தீட்டி உள்ளது.

இதன்படி அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற பிரதித்திபெற்ற விலை மதிப்புள்ள மீன்களை வளர்த்து விவசாயிகள் உயர் வருவாயைப் பெற்றிட திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி செலவில் மீன் குஞ்சு உற்பத்தி கட்டமைப்பு, மீன்குஞ்சு ஆய்வுகங்கள் ஏற்படுத்தப்படும். அதேபோல மீன்வளர்ப்போருக்கு நாட்டின மீனினங்களை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் வழங்கப்படும்.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்குஞ்சு பொறிப்பகம், வளர்ப்பு குளங்கள் அமைத்தல், உள்ளீட்டு மானியம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரூபாய் 120 கோடியே 65 லட்சம் செலவிடப்படும். தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு உள்கட்மைப்புத் திட்டத்தின் கீழ் நல்லுக்கோட்டை, மணிமுத்தாறு, திருகாம்புலியூர், அசூர், பிளவக்கல், ஒக்கேனக்கல், சிற்றாறு, பவானி சாகர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள அரசு மீன்பண்ணைகள் 34.40 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மீன்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூபாய் 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நீர்வள நில வள திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நாகை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை தொடங்கப்படும். மீன் அங்காடிகளும் தொடங்கப்படும்.

SCROLL FOR NEXT