தங்கம் விலை
தங்கம் விலை 
பொருளாதாரம்

தொடர்ந்து எகிறும் தங்கத்தின் விலை: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

காமதேனு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து 5,070 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து 40,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து 73.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 100 ரூபாய் உயர்ந்து 73,100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT