பொருளாதாரம்

அதிரடியாக வட்டியை உயர்த்தியது ஆர்பிஐ: வீடு, தனிநபர் கடன் வட்டி உயர்கிறது

காமதேனு

குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதத்தை 0.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயருகிறது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உக்ரைனில் நடந்து வரும் போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என்றும் இதன் காரணமாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) 0.40 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்த ஆர்பிஐ ஆளுநர், அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் வட்டி விகிதம் உயர்வை கண்டிருக்கிறது என்றும் நிதிக்கொள்கை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வட்டி விகிதம் உயருகிறது என்றும் கூறினார்.

கரோனாவால் மக்கள் இன்னும் மீளாத நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT