பொருளாதாரம்

நட்சத்திர ஓட்டலில் ஜிஎஸ்டி மாநாடு நடத்த தடை கேட்டவரை அதிர வைத்த நீதிபதிகள்!

கி.மகாராஜன்

சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஜிஎஸ்டி மாநாடு நடத்த தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு உயர் நீதிமன்ற கிளை அபராதம் விதித்தது.

மதுரையைச் சேர்ந்த வி.எம்.ஜோஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மத்திய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆண்டு மாநாடு மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் மே 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மத்திய நேரடி வரி விதிப்பு மற்றும் சுங்க வாரியம் நடத்துகிறது. அரசுத்துறை கட்டிடம், வளாகங்கள் இருக்கும் போது மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு நட்சத்திர ஓட்டலில் மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடாது. இதனால் மாமல்லபுரம் தனியார் நட்சத்திர ஓட்டிலில் ஜிஎஸ்டி மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்" என்ற கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனு பொதுநலன் மனு அல்ல. விசாரித்ததில் மக்கள் நலனுக்கு எதிரான மனு. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மனுதாரர் பணத்துக்கான டிடி மற்றும் மன்னிப்பு கடிதத்தை மத்திய அரசுக்கு 4 வாரத்தில் அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT