பொருளாதாரம்

கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் 20 லட்ச ரூபாயை இழந்ததால் விரக்தி... தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!

காமதேனு

கிரிப்டோகரன்சி உள்ளிட்ட ஆன்லைன் வணிகங்களில் 20 லட்ச ரூபாயை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் எல்பி நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார்(44). இவரது மனைவி ஹரி. தனியார் நிறுவன ஊழியரான ரவிக்குமார் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதன் பின் அறைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மின்விசிறியில் மனைவியின் சேலையில் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

அறைக்குள் சென்ற கணவர், நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லையே என ஹரி போய் பார்த்த போது ரவிக்குமார் தூக்கில் தொங்கியதைக் கண்டு அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரவிக்குமாரை தூக்கில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இவர் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எல்.பி நகர் காவல் நிலையத்திற்கு ரவிக்குமாரின் மனைவி ஹரி தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த போலீஸார், ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின் ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். கிரிப்டோகரன்சி உள்பட பல்வேறு ஆன்லைன் வணிகங்களில் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரால் லாபம் ஈட்டமுடியவில்லை. இதனால் 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை அவர் இழந்திருக்கலாம் என்று போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் பணம் இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!

புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!

தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!

SCROLL FOR NEXT