சிறு தானிய உற்பத்திக்கு சிறப்பு திட்டங்கள்#TNBudget2022

சிறு தானிய உற்பத்திக்கு சிறப்பு திட்டங்கள்#TNBudget2022

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் சிறுதானிய உற்பத்தியை பெருக்கவும், சிறு தானிய விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது. அதன் மூலம் தமிழ்நாட்டில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக முதல் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது சிறப்பு மண்டலம் அமைகிறது.

துவரை பயிருக்கும் சிறப்பு மண்டலம்

திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிறுதானியங்களின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சிறுதானிய திருவிழா நடத்திடவும் நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு தானியங்கள் மற்றும் பயிறு வகைகள் விதை உற்பத்திக்காக விதை முதல் உற்பத்திக்காக 125 கோடியில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.