வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம்#TNBudget2022

வேளாண் பட்டதாரி இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 லட்சம்#TNBudget2022

வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசுகையில், நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.71 கோடியில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும். வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும். விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 30 ஆயரம் மெட்ரிக்டன் விதைகள் வழங்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.