குட்நியூஸ்: பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் இன்று பணம்!

விவசாயி
விவசாயி

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த கட்ட தவணைத்தொகை 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்குமே நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என வருடத்திற்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக ஏப்ரல்- ஜுலை, ஆகஸ்ட் - நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் உள்ள பிர்சா கல்லூரியில், பழங்குடியினர் கவுரவ தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரதமர் கிசான் திட்டத்தின் 15வது தவணையை விடுவிக்கிறார்.

விவசாயி
விவசாயி

15-வது தவணையாக, 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள்,  பிரதமரால் விடுவிக்கப்பட உள்ள ரூ.18,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பயனாளிகளுக்கு மாற்றப்பட்ட மொத்த தொகை ரூ.2.80 லட்சம் கோடியைத் தாண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிதி உதவி விவசாயிகளின் விவசாய மற்றும் பிற தற்செயல் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். மேலும், விவசாயிகள் தங்களது சுய விபரங்களான EKYC யை சரியாக, கட்டாயமாக வழங்கியிருக்க வேண்டும். இதில் தவறுகள் இருந்தால் நிதியுதவி கிடைக்காது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in