டெல்லியில் விவசாயிகள் போராட்ட அறிவிப்பால் போலீஸ் குவிப்பு: உ.பி, ஹரியாணா,பஞ்சாப் எல்லைகள் மூடல்!

சாலையில் நடுவே சிமென்ட் தடுப்பு அமைக்கும் பணி
சாலையில் நடுவே சிமென்ட் தடுப்பு அமைக்கும் பணி

டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படை
துணை ராணுவப் படை

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றுதல், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

மேலும், புதுடெல்லி அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா தொழில் நகரங்கள் அமைக்க கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு நியாயமான விலை வழங்கக் கோரியும் டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டெல்லியை  நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மயூர் விஹார் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச விவசாயிகள் இன்று தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வரும் 13-ம் தேதி, 'டெல்லி சலோ' என்ற பெயரில் தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து பேரணி மற்றும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

இதையடுத்து, ஹரியாணா மற்றும் உ.பி எல்லையில் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ராணுவப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் சிமென்ட் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான பணிகள் நேற்று இரவே தொடங்கின.

முள் கம்பிகள் அமைத்தும் சாலைகளை  போலீஸார் முடக்கி உள்ளனர். இந்தப் பகுதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட பகுதியாக காணப்படுகிறது. ஆனாலும் தங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்க போவதில்லை என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in