
தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 2,600 கனஅடி நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரிநீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை இல்லாததன் காரணமாக, நீர்நிலைகளில் நிர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்,குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு உத்தரவாக பிறப்பிக்கும். அந்த உத்தரவின்படி தமிழகத்திற்கு குறிப்பிட்ட தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என்பதே இறுதி உத்தரவாக இருக்கும்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!