இல்லத்தரசிகள் அதிர்ச்சி... இன்னும் 2 மாதத்திற்கு வெங்காயம் விலை குறையாது!

வெங்காய மண்டி
வெங்காய மண்டி
Updated on
1 min read

வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மாதத்திற்கு வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்று தகவலால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

வெங்காயம்
வெங்காயம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. புகழ்பெற்ற வெங்காயம் மொத்த விலை சந்தையான நாசிக்கில் வெங்காயத்தின் விலை தற்போது 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தற்போது வெங்காயம் கிலோ ₹60-70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் 80 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தை பொருத்தவரை மொத்த விலையில் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், சில்லறை விலையில் 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி பற்றாக்குறை மற்றும் பண்டிகை காலம் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சில்லறை விற்பனை
சில்லறை விற்பனை

காரீஃப்  பருவத்தில் அறுவடைக்கு வரும் வெங்காயம் மொத்த சந்தைகளுக்கு டிசம்பர் மாதம் தான் வர உள்ளது. அதனால், குறைந்தது 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படும் என தெரிகிறது.

தற்போது பருவ மழை பல மாநிலங்களிலும்  தொடங்கியுள்ளதால் அதனாலும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு மேலும் விலை உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் இந்தியா முழுவதும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in