தமிழக அரசின் தனித் தீர்மானம் கர்நாடகத்தை தடுக்குமா?

தமிழக அரசின் தனித் தீர்மானம் கர்நாடகத்தை தடுக்குமா?

மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருகிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசு, நிச்சயம் அங்கு அணை கட்டியே தீருவோம் என்று உறுதிபட சொல்லி இருக்கிறது. கர்நாடக அரசின் இந்த செயலை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு விவசாய அமைப்புக்களின் சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழக அரசின் சார்பில் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு ஒரு செங்கல்லைகூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வருகிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட திட்டமிட்டு இருக்கும் கர்நாடகத்திற்கு மத்திய அரசு சார்பில் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in