8000 கனஅடியாக குறைந்தது நீர்வரத்து: மேட்டூரிலிருந்து திறக்கப்படும் பாசன நீரின் அளவு குறைப்பு!

8000 கனஅடியாக குறைந்தது நீர்வரத்து: மேட்டூரிலிருந்து திறக்கப்படும் பாசன நீரின் அளவு குறைப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்று நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாகக் குறைந்தது.

காவிரி டெல்டா பாசனங்களுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படும் மேட்டூர் அணை 120 அடி நீர்மட்டம் கொண்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 8ம் தேதியன்று நூறு அடிக்கும் கீழ் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்தது. ஆனால் அப்போதிலிருந்து கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் காவிரியில் நீர்வரத்து திரும்ப அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து காவிரியில் வெள்ளம் அதிகரித்து மேட்டூர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரத்தொடங்கியது. வினாடிக்கு 2 லட்சம் கன அடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்த நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

இரண்டாவது நாளாக இன்று நீர்வரத்து வினாடிக்கு 8000 கன அடியாகக் குறைந்தது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in