'என் வீடு திறந்தே தான் இருக்கிறது'... ஆவின் பால் குறித்து புகார் தெரிவிக்கலாம்... அமைச்சர் மனோ தங்கராஜ்!

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்

நல்ல பால் வழங்குவோருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் நாளை (அக்.7) முதல் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆவின் தொழிற்சாலையில் 8 மாவட்டங்களைச் சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆவின் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக இருந்த ஒவ்வொரு இடர்பாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்பட்டு வருகின்றன. பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டர் என்று இருந்ததை கடந்த 4 மாதங்களில் 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளோம். ஆவின் நிறுனத்தின் விநியோக சங்கிலியை (Supply Chain) மேம்படுத்தியுள்ளோம். 

பாலின் தரத்திற்கேற்ற விலை நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு  லிட்டருக்கு ரூபாய் 3 முதல் 5 கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு பாலின் தரத்தை அறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய  அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும் தற்போது பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் கறவை மாடுகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிகளவிலும் தரமான வகையில் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 

ஆவின்
ஆவின்

அதேபோல, ஆவின் பால் பாக்கெட்களை நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், கமிஷன் கேட்டல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் செய்திடலாம். தகுந்த ஆதாரத்துடன் வரும் புகார்கள் மீது 100 சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை தொடங்க உள்ளோம். தீபாவளிக்கு 15 நாட்களுக்கு முன்பே நெய் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் அதற்கான உற்பத்தியைத் தொடங்கி தாராளமாக வழங்கப்படும். 

ஆவினில் சென்ற மாதத்தில் 8 சதவீத விற்பனை உயர்ந்துள்ளது. படிப்படியாக உயர்ந்து வருகிறது. எனது வீடு திறந்தே தான் இருக்கும், பால் தொடர்பான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை கடிதம் மூலமாகவோ, நேரில் வந்தும் தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in