‘விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றும்’ ராகுல் காந்தி திடீர் உத்திரவாதம்

தமிழக விவசாயிகள் போராட்டம் ஒன்றில் ராகுல் காந்தி - கோப்பு படம்
தமிழக விவசாயிகள் போராட்டம் ஒன்றில் ராகுல் காந்தி - கோப்பு படம்

காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால், குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் என அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்லும் நாளில் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு வந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

“விவசாய சகோதரர்களே... இன்று ஒரு வரலாற்று நாள். சுவாமிநாதன் ஆணையத்தின்படி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்க சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது” என்று தனது எக்ஸ் தளத்தின் பதிவில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

’இந்த நடவடிக்கை 15 கோடி விவசாய குடும்பங்களின் செழிப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் வாழ்க்கையை மாற்றும்’ என்றும் ராகுல் பெருமிதம் தெரிவித்துள்ளார். "இது நீதியின் பாதையில் காங்கிரஸின் முதல் உத்தரவாதம்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றார். “காங்கிரஸ் ஒரு வரலாற்று உறுதிமொழியை எடுத்துள்ளது. சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி, விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்குவதற்கான சட்டத்தை உருவாக்கி உத்தரவாதம் அளிப்போம்'' என்று கார்கே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, 'டெல்லி சலோ' போராட்டத்தை தொடங்கியுள்ள விவசாயிகள் ’குறைந்த பட்ச ஆதார விலையில் பயிர்களை கொள்முதல் செய்ய உத்தரவாதம் அளிக்கும் சட்டம், கடன் தள்ளுபடி, மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதை நிறுத்துதல், முந்தைய சுற்றுப் போராட்டங்களின் போது போடப்பட்ட விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம்’ உள்ளிட்ட 8 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னதாக, காங்கிரஸும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தை ஆதரித்ததுடன், ’டெல்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணியை கட்டுப்படுத்த சர்வாதிகார வழிகளைக் கடைப்பிடிப்பதாக’ மத்திய மற்றும் மாநிலங்களின் பாஜக அரசைக் கண்டித்தது. விவசாயிகளுக்கு நியாயம் வழங்க பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in