புதிய மாவட்டத்திற்கும் பூரிப்பான அறிவிப்புகள்#TNBudget2022

புதிய மாவட்டத்திற்கும் 
பூரிப்பான அறிவிப்புகள்#TNBudget2022

புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறைக்கும் பூரிப்பு தரும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்ட விவசாயிகள் தங்கள் மண்ணை குறித்த நேரத்திற்குள் பரிசோதனை செய்து அதற்கேற்ப விவசாயம் செய்து கொள்ளலாம்.

திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில் குழித்தட்டு நாற்று உற்பத்திக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே தலைஞாயிறு நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017-ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு பிறகு இயங்காமல் உள்ளது. அதனை மீண்டும் இயக்குவதற்கு தேவையான நடைமுறை சாத்தியங்கள் குறித்து ஆராய குழு அமைத்து, மீண்டும் ஆலை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.