
ஏற்கனவே சதமடித்திருக்கும் சின்ன வெங்காயத்தின் விலை, வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.
சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியதில், தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் அதன் விலை ரூ100-ஐ தாண்டியுள்ளது. மேலும் வரவிருக்கும் நாட்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லாததால், அதன் விலையேற்றம் இதர காய்கனிகளின் விலையிலும் எதிரொலிக்கக்கூடும்.
ஒரு மாதத்துக்கு முன்னர் தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு நாட்டை படுத்தி எடுத்ததன் சுவடு இன்னமும் மறையவில்லை. தக்காளியுடன் சேர்ந்தே ஏறிய சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது தக்காளி விலை தரைக்கு இறங்கிய பிறகும், வெங்காயம் மட்டும் தனி ஆவர்த்தனமாய் விலையேறி வருகிறது. குறைபட்ச விலையாக பல்வேறு ஊர்களிலும் சர்வ சாதாரணமாக சின்ன வெங்காயம் சதமடித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையின் மொத்த விற்பனையில் சின்ன வெங்காயத்தின் விலை ரூ110 என்பதாக விலை உயர்வு கண்டுள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக சாமானியர்கள் பெரிய வெங்காயம் பக்கம் திரும்பியதில் அதன் விலையும் அதிகரித்து, குறைந்தபட்ச விலை ரூ50 என்பதை தாண்டியுள்ளது. தற்போதைய விலை உயர்வு மட்டுமன்றி, இனி வரும் நாட்களிலும் சின்ன வெங்காயத்தின் விலை உயரவே வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது.
வரத்து குறைவு மற்றும் பருவ மழை காரணமாக எழும் இடையூறுகள் ஆகியவற்றால் சின்ன வெங்காயம் விலை மேலும் உயரவே வாய்ப்பாகிறது. உணவு தயாரிப்புக்கான உப பொருட்களான சின்ன, பெரிய வெங்காயங்களின் விலை உயர்வு, இயல்பாக இதர காய்கனிகளின் விலையையும் பாதிக்கக்கூடியது என்பதால், பருவ மழையின் மத்தியில் ஒட்டுமொத்தமாக காய்கனிகளின் விலை மற்றுமொருமுறை உச்சம் தொட காத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!
உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்
ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு