விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய்: பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணை விடுவிப்பு

விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய்: பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணை விடுவிப்பு

தீபாவளி மற்றும் நடப்பு ராபி பருவ விதைப்புக்கு முன்னதாக, பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையாக 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி மதிப்பிலான நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.

தீபாவளி மற்றும் நடப்பு ராபி பருவ விதைப்புக்கு முன்னதாக, பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையாக 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி மதிப்பிலான நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.

டெல்லியில் உள்ள பூசா வளாகத்தில் நடைபெற்று வரும் "பிஎம் கிசான் சம்மான் சம்மேளன் 2022" என்ற இரண்டு நாள் நிகழ்வில் இன்று 12வது தவணையை பிரதமர் மோடி விடுவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் கலந்து கொண்டனர். பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 2.16 லட்சம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in