புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி புகார்... இந்திய மசாலாக்கள் மீது பிடியை இறுக்கும் இங்கிலாந்து

எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்
எவரெஸ்ட் - எம்டிஹெச் மசாலாக்கள்

புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லி இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, இறக்குமதியாகும் அனைத்து இந்திய மசாலா இறக்குமதிகள் மீதான ஆய்வை இங்கிலாந்து கடுமையாக்குகிறது.

இங்கிலாந்தின் உணவு கண்காணிப்பு அமைப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து மசாலாப் பொருட்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் 2 பிராண்டுகளுக்கு எதிரான பூச்சிக்கொல்லி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அனைத்து இந்திய மசாலாப் பொருட்களையும் ஆய்வு செய்வது தொடர்பான உலகளாவிய கவலையை இங்கிலாந்தும் எதிரொலித்துள்ளது.

எவரெஸ்ட் மீன் மசாலா
எவரெஸ்ட் மீன் மசாலா

கடந்த மாதம் எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் என 2 இந்திய நிறுவனங்கள் தயாரித்த 3 மசாலா கலவைகளின் விற்பனையை ஹாங்காங் நிறுத்தியது. அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு அதிக அளவில் இருப்பதாகக் கூறியது.

எவரெஸ்ட் தனது மசாலா இருப்பை திரும்பப் பெற சிங்கப்பூர் உத்தரவிட்டது, மேலும் நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தியாவின் 2 மசாலா பிராண்டுகள் தொடர்பான சிக்கல்களை ஆராய்ந்து வருவதாகக் கூறின. இந்தியாவின் மிகவும் பிரபலமான 2 பிராண்டுகளான எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவை, தங்கள் தயாரிப்புகள் நுகர்வுக்கு பாதுகாப்பானவை என்று கூறியுள்ளன.

இதனிடையே "எத்திலீன் ஆக்சைடின் பயன்பாடு இங்கு அனுமதிக்கப்படவில்லை, மேலும் மசாலாப் பொருட்களுக்கான அதிகபட்ச எச்ச அளவுகள் உள்ளன" என்று இங்கிலாந்து உணவு கண்காணிப்பு அமைப்பின் உணவுக் கொள்கை துணை இயக்குநர் ஜேம்ஸ் கூப்பர் என்பவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். "சந்தையில் பாதுகாப்பற்ற உணவு ஏதேனும் இருப்பின், நுகர்வோர் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உணவு கண்காணிப்பு அமைப்பு விரைவான நடவடிக்கை எடுக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

எம்டிஹெச் மசாலா
எம்டிஹெச் மசாலா

எம்டிஹெச் மற்றும் எவரெஸ்ட் ஆகியவை தங்கள் தயாரிப்புகளை அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து 128 மில்லியன் டாலர் மதிப்பிலான மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்தது. இதில் இந்தியாவினுடைய கிட்டத்தட்ட 23 மில்லியன் மதிப்புடையதாகும். இவற்றின் மத்தியில் உலகளவில் மசாலாப் பொருட்களின் மிகப்பெரும் உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மட்டுமன்றி நுகர்வோராகவும் இருக்கும் இந்தியாவுக்கு இது ஒரு கரும்புள்ளியாகவே நீடிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!

ஆன்ட்ராய்டு 15 அப்டேட்... மொபைல் திருடு போனால் உரிமையாளரை எச்சரிக்கும்; முக்கிய தகவல்களையும் பாதுகாக்கும்

கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in