‘எங்க நெல்லையும் வாங்கிக்கோங்க’ - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கோரிய காரைக்கால் விவசாயிகள்

‘எங்க நெல்லையும் வாங்கிக்கோங்க’ -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கோரிய காரைக்கால் விவசாயிகள்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உற்பத்தி செய்யப்படும் நெல்லையும் தமிழக அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் வாயிலாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சரிடம் காரைக்கால் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வந்திருந்தார். அப்போது  சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் தலைமையில்  காரைக்கால் பிரதேச விவசாய நலசங்க தலைவர் பொன்.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். 

எதிர்வரும் சம்பா அறுவடையின்போது காரைக்கால் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை தமிழக அரசு சார்பில் கொள்முதல் நிலையங்கள் வாயிலாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் அமைச்சரிடம்  கோரிக்கை வைத்தனர். நாஜிமும் இது குறித்து தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தார். “தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து காரைக்கால் மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்” என்று நாஜிம் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரி அரசிடம் இருந்து இதுகுறித்து கோரிக்கை வரும் பட்சத்தில் தமிழக முதல்வரிடம் இதுபற்றி தெரிவித்து, நெல் கொள்முதல் செய்ய  தமிழக உணவுத்துறை அமைச்சர் மூலம் ஆவன செய்வதாக அவர்களிடம் அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.   

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in