வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு... அதிரடி முடிவெடுத்தது மத்திய அரசு!

வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த, மத்திய அரசு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் வெங்காயத்தின் விலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 57% விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 47 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

சில்லறை விலையில் 65 முதல் 70 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காய சாகுபடிக்கு காலதாமதம் ஏற்பட்டதாலும், சாகுபடி பரப்பளவு குறைந்ததாலும், வெங்காயம் தாமதமாக சந்தைக்கு வந்தது போன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.47க்கு விற்பனை
மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.47க்கு விற்பனை

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ரோகித் குமார், ”கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை படிப்படியாக விடுவித்து வருகிறது. 22 மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 1.7 லட்சம் டன் வெங்காயம் மொத்த விலை சந்தையில் விடுவிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே வெங்காயம் விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வை கட்டுப்படுத்தவும் சாமானிய மக்கள் வெங்காய விலை உயர்வால் பாதிக்கப்படாமல் தடுக்கவும் சில்லறை விற்பனையாக ஒரு கிலோ வெங்காயத்தை ரூபாய் 25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

சில்லரையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை
சில்லரையில் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை

தலைநகர் டெல்லியில் 15 நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாயாக இருந்த வெங்காயம் தற்போது 60 ரூபாயாக அதிகரித்துள்ளது சில்லறை விலையில் 65 முதல் 70 ரூபாய் வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in