இன்று ‘கிராமின் பாரத் பந்த்’; கிராமங்களை குறிவைக்கும் விவசாயிகள் போராட்டத்தின் வினோத அம்சங்கள்

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Updated on
2 min read

டெல்லியை நோக்கி பேரணியாக கிளம்பியிருக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் ’கிராமின் பாரத் பந்த்’ என்ற புதிய பந்த் நிகழ்வு இன்று(பிப்.16) நடைபெறுகிறது.

நகரங்களை பாதிக்காது, கிராமங்களை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த பந்த் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ”கிராமின் பாரத் பந்த் நடைபெறும் நாளில், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல மாட்டார்கள்; விவசாயம் தொடர்பான வேலைகள் எதுவும் நடைபெறாது. இந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்” என்று பாரதிய கிசான் யூனியன் (திகைத்) பிரிவின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

ராகேஷ் திகைத்
ராகேஷ் திகைத்

"எங்களுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த கிராமின் பாரத் பந்த் காண்பிக்கும். கிராமங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மட்டுமன்றி, வணிகர்களும் இணைந்து பங்கேற்கிறார்கள். இவர்கள் மட்டுமன்றி, நேரடியாக ’டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணியில் பங்கேற்காதவர்களும், தங்களுடைய ஆதரவை வழங்க விரும்புவோரும் இந்த கிராமிய பாரத் பந்தில் பங்கேற்பார்கள்.” என்று திகைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் சங்கத்தினரின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இந்த கிராமின் பாரத் பந்த் என்பது காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அப்போது அனைத்து கிராம சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் 100 நாள் வேலைத்திட்டப் பணிகள் உட்பட எந்த விவசாய பணிகளும் நடைபெறாது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விவசாயிகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் கூடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும். இருப்பினும் மதியம் முதல் மாலை வரை போக்குவரத்து தடைபட நேரிடும் என்பதால், பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துவோர் தாமதமாக வீடு திரும்ப நேரிடும். கிராமின் பாரத் பந்த் போராட்டத்தால் நேரடியாக நகரங்கள் பாதிக்கப்பட மாட்டாது என்றபோதும், கிராமங்களில் இருந்து நீளும் பால் மற்றும் காய்கறி விநியோக சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

டெல்லி சலோ பேரணியில் பங்கேற்கும் விவசாய சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்போர் இந்த பந்த் நிகழ்வில் பங்கேற்பார்கள். இந்த வகையில் இந்தியாவின் ஒருசில வடக்கு மாநிலங்களில் இவை தீவிரமாக நடைபெறும். மற்ற இடங்களில் ஆதரவளிப்போர், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோரும் தங்களது பகிரங்க ஆதரவை நல்குவார்கள். அந்த அடிப்படையில், ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் கிராமின் பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிசமான வட மாநிலங்களுக்கு அப்பால் இந்த பாரத் பந்த் நிகழ்வுக்கு தென்னிந்தியாவில் போதிய வரவேற்பில்லை .

இதையும் வாசிக்கலாமே...  

விருப்பம்போல சாப்பிடலாம், தூங்கலாம்... வேலையும் பார்க்கலாம்; ஹைதராபாத்தில் ஜாலி ஆபீஸ்!

பிரதமர் மோடியை பதவி விலக வேண்டும்... பகீர் கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!

வித்தவுட்டில் பயணம்... ரூ.100 கோடி அபராதம் தீட்டிய மும்பை ரயில்வே கோட்டம்!

லிவிங் டு கெதரில் மாணவி... கல்லூரி விடுதியில் குழந்தையைப் பெற்றதால் அதிர்ச்சி!

கேன்சர் நோயாளியை கொன்ற ‘எந்திரன்’; அறுவை சிகிச்சையில் நேரிட்ட விபரீதம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in