தேனீ வளர்ப்பு, தக்காளி சாகுபடியை ஊக்கவிக்க நடவடிக்கை#TNBudget2022

தேனீ வளர்ப்பு, தக்காளி சாகுபடியை ஊக்கவிக்க நடவடிக்கை#TNBudget2022

பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசுகையில், விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவது வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும். விதை முதல் விளைச்சல் வரை அனைத்து தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு மின்னணு வகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவிற்கு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை, மா, வாழை, கொய்யா தோட்டங்களில் ஊடு பயிருக்காக ரூ.27.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயிர்க்காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,546 கோடி ஒதுக்கப்படும். தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகள் நுண்ணூர்ப்பாசனம் அமைப்பதற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3 ஆயிரம் மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in