கால்நடை மருத்துவமனை அமைக்க அடிப்படை தகுதிகள் இவைதான் - பேரவையில் அமைச்சர் விளக்கம்

கால்நடை மருந்தகம்
கால்நடை மருந்தகம்

ஒரு ஊரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையாக என்ன தகுதி இருக்க வேண்டும் என்று சட்டசபையில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தற்போது விவசாயத்திற்கு இணையாக கால்நடை வளர்ப்பு தொழிலும்  மக்களால்  அதிகமாக விரும்பப்படுகிறது. அதனால் கால்நடைகள் அதிகம் உள்ள ஊர்களில் கால்நடை மருந்தகம் அல்லது மருத்துவமனை திறக்க வேண்டும் என்று அதிகம்  கோரிக்கைகள்  வருகின்றன. இதற்கு  பதில் தரும் வகையில் அமைச்சர் சட்டமன்றத்தில்  விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வினா விடை நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.  அந்த வகையில் தங்கள் தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற ஒரு உறுப்பினரின் கேள்விக்கு கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

கால்நடைகள்
கால்நடைகள்

ஒரு ஊரில் 3000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்தால் அங்கு கால்நடை மருந்தகம் அமைக்கலாம். அதேபோல ஒரு ஊரில்  5000க்கும்  மேற்பட்ட கால்நடைகள் இருந்தால் அங்கு  கால்நடை மருத்துவமனை அமைக்கலாம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in