5 ஆயிரம் மரக் கன்றுகள்... ஒரே நேரத்தில் நட்ட இந்தோ - திபெத் படையினர்!

மர கன்றுகளை நட்ட இந்தோ திபெத் படையினர்
மர கன்றுகளை நட்ட இந்தோ திபெத் படையினர்

சிவகங்கை அருகே இந்தோ திபெத் படை வீரர்கள் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக் கன்றுகளை நடும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் துவக்கி வைத்தார்.

இந்தோ திபெத் படை வீரர் பயிற்சி மையத்தில் மரக் கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்
இந்தோ திபெத் படை வீரர் பயிற்சி மையத்தில் மரக் கன்று நட்ட மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம் கிளாதிரி கிராம பகுதியில் இந்தோ திபெத் படை வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு சுமார் 500 வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு ஒரே நேரத்தில் 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கென கிளாதிரி ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட பகுதியில் மா, கொய்யா, சந்தனம், மகாகனி, நெல்லி உள்ளிட்ட 5 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் மர கன்றினை நட்டு வைத்து நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்தோ திபெத் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள், கிராம மக்கள், பயிற்சி மைய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து 5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டனர். முன்னதாக சிவகங்கை வீதிகளில் தேசிய கொடிகளுடன் பேரணி சென்ற வீரர்கள் ராணி வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தோ திபெத் பயிற்சி மைய கமாண்டர் சுரேஷ் யாதவ், பயிற்சி மைய காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in