பெரும் சிக்கலில் பிலிப்ஸ் நிறுவனம்... உயிர் காக்க வேண்டிய சுவாசக் கருவிகள் உயிரைப் பறிப்பதாக குற்றச்சாட்டு!

பிலிப்ஸ் சுவாசக் கருவி
பிலிப்ஸ் சுவாசக் கருவி

உயிரைக் காப்பதற்கான சுவாசக் கருவிகள் உயிரைப் பறிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, பிரபல பிலிப்ஸ் நிறுவனம் சந்தையில் விற்பனையான தனது சுவாசக் கருவிகளை திரும்பப் பெற்று வருகிறது.

மனிதருக்கு சுவாசம் எத்தனை முக்கியம் என்பதை கொரோனா காலத்தில் உணர்ந்திருப்போம். சுவாசத்துக்கு அவசியமான வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளின் முக்கியத்துவத்தையும் அப்போது அறிந்திருப்போம். ஆனால் உயிரைக் காக்க வேண்டிய அந்த சுவாசக் கருவிகளால் புற்றுநோய் பாதிப்பு காண்டவர்கள், பிலிப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக உலகம் முழுக்க திரண்டிருக்கிறார்கள்.

பிலிப்ஸ் சுவாசக் கருவி
பிலிப்ஸ் சுவாசக் கருவி

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் இதர எலெக்ட்ரானிக் சாதனங்கள் வரை கோலோச்சும் பிலிப்ஸ் நிறுவனம் உயிர்காக்கும் மருத்துவ சாதனங்களையும் தயாரித்து வருகிறது. அவற்றில் சுவாசம் தொடர்பான பல உபாதைகளுக்கான பல்வேறு ரகங்களிலான சுவாசக் கருவிகளையும் உலகம் முழுக்க பிலிப்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த கருவிகளில் பொறுத்தப்பட்ட பஞ்சு போன்ற நுரை பொருள் ஒன்றினால், சுவாசக் கருவியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து விளைந்திருக்கிறது.

சோபா மற்றும் மெத்தைகள் தயாரிப்பில் உபயோகமாகும் ’ஃபோம்’ நுரை பொருளின் இன்னொரு வடிவத்தை சுவாசக் கருவிகளில் பிலிப்ஸ் பயன்படுத்தி இருக்கிறது. அதனை விட தரமான பொருளை போட்டி நிறுவனங்கள் பயன்படுத்திய போதும், லாப நோக்கில் தரம் குறைவான நுரை பொருளை சேர்த்திருக்கிறது பிலிப்ஸ். இதனால், மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் சாதாரண எரிச்சல் முதல் உயிரைப் பறிக்கும் புற்றுநோய் வரை பீடிக்க காரணமானது.

பிலிப்ஸ் சுவாசக் கருவியை பயன்படுத்தியதால் தொண்டை புற்றுக்கு ஆளாகி, பிலிப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் ஜார்ஜ் பேல்ஸ்.
பிலிப்ஸ் சுவாசக் கருவியை பயன்படுத்தியதால் தொண்டை புற்றுக்கு ஆளாகி, பிலிப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் ஜார்ஜ் பேல்ஸ்.

சுவாசக் கருவியில் இருந்து வெளியான கருந்துகள்கள் இந்த பாதிப்புகளுக்கு காரணமானது. இது தொடர்பான புகார் 2010ல் வெளியானது. ஆனபோதும் அடுக்கடுக்கான புகார்களை அடுத்து 2021ல், தனது தவறை பிலிப்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. சுமார் 7 லட்சத்துக்கும் மேலானோருக்கு விற்பனையான அந்த சுவாசக் கருவிகளை பின்னர் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. தனது தயாரிப்பில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை பிலிப்ஸ் நிறுவனம் உணர்ந்தே இருந்ததும், 10 வருடங்களுக்கு முன்னரே குற்றச்சாட்டு எழுந்தபோதும் தவறை ஒப்புக்கொள்ளாது சமாளித்து வந்தது. இந்த தடுமாற்றங்கள் அனைத்தும் தற்போது அந்த நிறுவனம் கட்டிக்காத்த நற்பெயருக்கு வேட்டு வைத்திருக்கிறது.

புலிட்சர் விருது பெற்ற புரோபப்ளிகா என்ற செய்தியகம் சுமார் ஒரு வருட காலம் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் புலனாய்வுகளின் அடிப்படையில், பிலிப்ஸ் நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. அது தொடர்பான விரிவான கட்டுரையை அதன் தளத்தில் காணலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in