துல்லியமான தாக்குதலுக்கு உதவும் அக்னி ப்ரைம் ஏவுகணை

துல்லியமான தாக்குதலுக்கு உதவும் அக்னி ப்ரைம் ஏவுகணை
அக்னி ப்ரைம் ஏவுகணை

துல்லியமான தாக்குதல்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அக்னி ப்ரைம் ஏவுகணை, இன்று(டிச.18) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

டிஆர்டிஓ தயாரிப்பில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி வரிசை ஏவுகணைகளை, இந்தியா சுதேசி தயாரிப்புகளாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அக்டோபர் இறுதியில் ‘அக்னி 5’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 5000 கிமீ இலக்கை நோக்கி, அணு ஆயுதம் சுமந்து சென்று தாக்கும் வகையில் இந்த அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் அடுத்தகட்டமாக, சுமார் 8000 கிமீ தொலைவிலிருக்கும் இலக்கை தாக்கி அழிப்பதற்கான ‘அக்னி 6’ ஏவுகணை தயாரிப்பில் டிஆர்டிஓ மும்முரமாக உள்ளது. இதற்கிடையே குறைந்த தொலைவு, அதேவேளை கூடுதல் துல்லியத்துக்கு முக்கியத்துவம் தரும் அக்னி ஏவுகணை ஒன்றை டிஆர்டிஓ தயாரித்துள்ளது. அக்னி ப்ரைம் எனப் பெயரிடப்பட்ட இந்த அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் ஏவுகணை அதிகபட்சமாக 2000 கிமீ தொலைவிலான இலக்கை, கூடுதல் துல்லியத்துடன் விரைந்து சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்தால், இந்த அக்னி ப்ரைம் ஏவுகணைகளின் தேவையே பிரதானமாக இருக்கும். தரையிலிருந்து தரை நோக்கி குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிப்பதில் அக்னி ப்ரைம் ஏவுகணைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அக்னி ப்ரைமின் முதல்கட்ட சோதனை ஜூன் மாதத்தில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஏவுகணையாக 2-வது பரிசோதனை இன்று நடைபெற்றது.

ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையின் அப்துல்கலாம் தீவிலிருந்து இந்த அக்னி ப்ரைம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டது. அக்னி ப்ரைம் ஏவுகணைகள் அதிக எண்ணிக்கையில் ராணுவத் தளவாடங்களில் சேர உள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in