
தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினாரா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யப் பரிசீலனை செய்வதாகத் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை, இந்து மன்னர் ராஜா மான்சிங் தான் கட்டினார் என்று இந்து சேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. ஷாஜகானின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்புகளில் தாஜ்மகாலின் கட்டிடக் கலைஞர் குறித்த பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டி, ஷாஜகான் தான் தாஜ்மகாலை கட்டினார் என்ற சொற்றொடரை வரலாற்று பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தாஜ்மகால் கட்டுமானம் தொடர்பான கேள்விகளை தொல்லியில் துறை விசாரிக்கும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
அந்த மனுவில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்படவில்லை. அதற்கு முன்னதாக அந்தப் பகுதியில் ஆட்சி செய்த ராஜா மான்சிங் தான் கட்டினார். அவரது அரண்மனையைத்தான் பின்னர் ஷாஜகான் சீரமைத்து தாஜ்மகாலாக மாற்றினார். ஏனெனில், ராஜா மான்சிங் மன்னரின் அரண்மனை இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தாஜ்மகால் கட்டி முடித்ததற்கான வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை.
ஏற்கெனவே இருந்த அரண்மனை தான் தாஜ்மகாலாக புனரமைக்கப்பட்டது. அந்த இடத்தில் எந்தவொரு புதிய கட்டுமானமும் நடைபெறவில்லை. மேலும், ஷாஜகானின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்புகளில் தாஜ்மகாலின் கட்டிடக் கலைஞர் குறித்த பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. இந்த வரலாற்று உண்மையை ஆய்வு செய்து வரலாற்றில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று இந்துசேனா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் சுவாரஸ்யமான வரலாற்று உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். உண்மையில் தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என ஆராய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!