போர்த் தளவாடங்களை பரிசோதிக்கும் சீனா: இந்தியாவுக்கு நெருக்கடி?

போர்த் தளவாடங்களை பரிசோதிக்கும் சீனா: இந்தியாவுக்கு நெருக்கடி?

சீனா தன் வசமிருக்கும் போர்த் தளவாடங்களை பரிசோதிக்கவும், அவற்றின் செயல்பாட்டினை சரிபார்க்கவும் தொடங்கியுள்ளது. இதனால் சீனாவுடன் எல்லையில் மோதல் போக்கு கொண்டிருக்கும் இந்தியாவுக்கு நெருக்கடி எழுந்துள்ளது.

செயற்கையான போர்ச்சூழலை உருவாக்கி, ஆயுத தளவாடங்களின் செயல்பாட்டினையும், அவற்றின் திறனையும் சரிபார்க்கும் நடவடிக்கைகளை சீனா தொடங்கியுள்ளது. இதற்கான் அதிகாரபூர்வ உத்தரவினை அண்மையில் அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பித்திருந்தார். அதன்படி போர்ச் சூழல் எழுந்தால், சீனா தனது தளவாடங்கள் உதவியுடன் எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பதற்கான பரிசோதனைகளை அந்நாடு நேற்று(பிப்.14) தொடங்கி இருக்கிறது. இவை போர் ஒத்திகைக்கு இணையானவை ஆகும்.

சீனாவின் நட்பு தேசமான ரஷ்யா, உக்ரைன் மீது போர்த்தொடுக்க தயாராகி உள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. அமெரிக்கா நேரடியாக களமிறங்கவிலை எனினும், தனது அதி நவீன போர்த் தளவாடங்களை உக்ரைனுக்கு அள்ளித் தந்துள்ளது. மேலும் செயற்கைக்கோள் கண்காணிப்பு முதல் உளவுத் தகவல்கள் வரை உக்ரைனுக்கு வழங்கவும் அமெரிக்கா தயாராக உள்ளது.

ஆனால் ரஷ்யா போரில் இறங்கினால் ஓரிரு நாளில் தொடங்கி, அதிகபட்சம் ஒரே வாரத்தில் உக்ரைன் வீழ்ந்துவிடும். ஆனபோதும் நேட்டோ நாடுகளின் முடிவைப் பொறுத்து போர் நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் திரள்வதற்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் வகையிலும், சீனா தனது தளவாடங்களை பரிசோதிக்க ஆரம்பித்திருக்கிறது. சீனா உதவியின்றியே ரஷ்யாவால் போர்க்களத்தை எதிர்கொள்ள முடியும் என்ற போதும், ரஷ்யாவுக்கான ஆதரவினை உணர்த்தவதோடு, உலக நாடுகளுக்கு தனது இருப்பினை பறைசாற்றவும் இவற்றின் மூலம் சீனா முயல்கிறது.

ரஷ்யா- உக்ரைன் விவகாரத்தில் எந்த வெளிப்படையான முடிவையும் எடுக்காது, இந்தியா மௌனம் சாதித்து வருகிறது. போர் மூண்டாலும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே சரியான இடைவெளியை பேணவே இந்தியா முயலும். ஆனால் ரஷ்ய ஆதரவின் பெயரால் சீனா, போருக்குத் தயாராவது இந்தியாவை நெருக்கடியில் ஆழ்த்தக்கூடியது.

லடாக் உள்ளிட்ட எல்லைப் பிராந்தியங்களில், இந்தியா - சீனா இடையே போருக்கு நிகரான மோதல்கள் அவ்வப்பொது எழுந்து அடங்கி வருகின்றன. அருணாச்சலில் பாலங்கள், குடியிருப்புகள் என அத்துமீறி சீனா கட்டமைத்து வருவதும், நீண்ட காலமாக இந்தியாவை வெகுவாய் சீண்டி வருகிறது. எனவே சீனாவை பின்பற்றி இந்தியாவிலும் போர்த் தளவாடங்களை சரிபார்ப்பது உள்ளிட்ட ஆயத்த நடவடிக்கைகள மேற்கொள்ள அழுத்தம் நேர்ந்துள்ளது.

Related Stories

No stories found.