குழந்தைக்கு முருகன் பேரு... கூட்டத்துக்குத் தக்காளிச் சோறு..!- மதுரையில் களைகட்டிய குஷ்பு பிரச்சாரம்

குழந்தைக்கு முருகன் பேரு... கூட்டத்துக்குத் தக்காளிச் சோறு..!- மதுரையில் களைகட்டிய குஷ்பு பிரச்சாரம்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

காங்கிரஸ் தன்னைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மை என்பதை, மதுரை சுற்றுப்பயணம் வாயிலாக நிரூபித்திருக்கிறார் குஷ்பு. அரசியல் கூட்டங்களுக்கான தடை விலக்கப்பட்டதும், மதுரையில் முதலில் பிரச்சாரம் செய்தவர் அவர்தான்.

‘விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற பெயரில் பாஜக நடத்தும் கூட்டங்களில், வேளாண் சட்டம் குறித்து விளக்குவதுதான் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு என்றாலும், சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் சேர்த்தே ஆரம்பித்துவிட்டார் குஷ்பு. அதுவும் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்திய அதேநாளில்...

‘சும்மா குஷ்பு முகத்தை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுவோம்' என்று வந்தோரையும் தன்னுடைய பேச்சாலும், அணுகுமுறையாலும் கட்டிப்போட்டுவிடுகிறார் குஷ்பு. வெறுமனே மைக்கில் பேசிவிட்டுப் போகாமல், விவசாயிகளோடு உரையாடுகிறார். கிராமப்புறங்களில் தனக்கு சால்வை அணிவிக்கவும், ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக்கொள்ளவும் எல்லோரையும் அனுமதிக்கிறார். தயங்கியபடி பக்கத்தில் வரும் பெண்களிடம் பேச்சுக்கொடுக்கிறார். அதற்காகவே காத்திருந்ததுபோல, மதுரை மாங்குளத்தில் ஒரு பெண் அழுதுகொண்டே தன்னுடைய பிரச்சினையைச் சொன்னார். வரிச்சூர் அருகே ம.குன்னத்தூரில் பெரியவர் ஒருவர் தங்கள் ஊரின் குடிநீர்ப் பிரச்சினை பற்றிச் சொன்னபோது, தன் கையில் இருந்த மைக்கை அவருக்கு நீட்டிப் பேச வைத்தார். ஊமச்சிகுளத்தில் தன்னுடைய குழந்தைக்குப் பெயரிடுமாறு குஷ்புவிடம் கொடுத்தார் ஒரு பெண். "எங்கள் மாநிலத் தலைவர் பெயரையே சூட்டுகிறேன், முருகன்..." என்றார். பால்வாடி போகிற வயதுள்ள இன்னொரு குழந்தையும் கையில் கொடுக்கப்பட, எடை அதிகம் இருந்ததாலோ(!) என்னவோ ‘விநாயகன்' என்று பெயர் வைத்தார் குஷ்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in