மொபைலில் கலக்கப்போகும் கால் ஆஃப் டியூட்டி

மொபைலில் கலக்கப்போகும் கால் ஆஃப் டியூட்டி

க.விக்னேஷ்வரன்

இன்றைய தேதியில் மொபைல் வீடியோ கேம் உலகில் பட்டொளி வீசும் பப்ஜிக்கு வில்லனாக வரப்போகிறது இன்னொரு வீடியோ கேம். பெயர்: ‘கால் ஆஃப் டியூட்டி’ (சுருக்கமாக சிஓடி). ‘கூகுள் ப்ளே ஸ்டோ’ரில் இன்றைக்கு நூறு மில்லியன் பதிவிறக்கங்களுடன் கேம் உலக தாதாவாக பப்ஜி இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற வீடியோ கேமான ‘கால் ஆஃப் டியூட்டி', கூடிய விரைவில் மொபைல் போன்களில் அறிமுகமாக இருப்பது பப்ஜி நிறுவனத்தாரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

ஒரு வகையில் பார்க்கப்போனால், பப்ஜிக்குப் பல ஆண்டுகள் மூத்தகேம் ‘கால் ஆஃப் டியூட்டி’. 2003-ல் வெளியான இந்த கேம் கணினி, எக்ஸ் பாக்ஸ், ப்ளே ஸ்டேஷன், நிடன்டோவின் கையடக்க கேம் கருவிகள் என்று இதுவரை பதினைந்து பகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது முதன்முறையாக மொபைல் வழியாக வரவிருப்பதுதான் கேம் ஆர்வலர்களின் கொண்டாட்டத்துக்குக் காரணம். 2017-ல், அறிமுகமான பப்ஜி இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை எட்டியது என்பதுஆச்சரியத்துக்குரிய விஷயம்தான். அந்த ரெக்கார்டை பிரேக் செய்யும்விதமாக காலத்தே முன்தோன்றிய மூத்த கேமாம் ‘கால் ஆஃப் டியூட்டி’,பப்ஜியைக் காட்டிலும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாவதுதான் ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

நம்ப முடியாத துல்லியம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in