நமக்கு நாமே... கலக்கும் ‘கரைவெட்டி 2020’ படை!

நமக்கு நாமே... கலக்கும் ‘கரைவெட்டி 2020’ படை!

கரு.முத்து

நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியங்களால் நிரம்பியிருக்கிறது கரைவெட்டி கிராமம். மிகவும் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்தில் ஒரு சராசரி கிராமத்தில் எதையெல்லாம் எளிதில் செய்ய இயலாதோ அதையெல்லாம் வெகு சாதாரணமாக சாதித்திருக்கிறது  ‘கரைவெட்டி 2020’ என்ற இளைஞர்கள் குழு!

பொதுவாக அடுத்தடுத்த வீடுகளுக்குள் இருக்கும் வேலித்தகராறுகளே கிராமத்தில் பெரும் பிரச்சினையாக வெடிப்பதுண்டு. குளக்கரையையும் புறம்போக்கு இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வதும் கிராமங்களில் சர்வசாதாரணம். கரைவெட்டி கிராமமும் ஒரு காலத்தில் இதற்கெல்லாம் இலக்கணம்தான். ஆனால் இப்போது, அத்தனைக்கும் விதிவிலக்காய் நிற்கிறது இந்த கிராமம்.

இங்கே ஆக்கிரமிப்பில் இருந்த பொதுப்பாதைகள் அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டு இப்போது பொதுமக்களின் உபயோகத்தில் இருக்கிறது. 400 மீட்டர் தொலைவுக்கு புதிதாக சாலையே அமைத்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல... இந்த கிராமத்தில் இன்னும் பல அசாத்தியங்களையும் சாத்தியமாக்கி யிருக்கிறார்கள். அத்தனைக்கும் காரணம், ‘கரைவெட்டி 2020 இளைஞர்கள் குழு’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in