வண்ண வண்ண ஓவியங்கள்... வரைந்ததெல்லாம் திருநங்கைகள்!

வண்ண வண்ண ஓவியங்கள்... வரைந்ததெல்லாம் திருநங்கைகள்!

கா.சு.வேலாயுதன்

அந்தப் பிரம்மாண்ட கட்டிடங்களின் சுவர்களில் ஏதோ ஒரு தனியார் கம்பெனிக்கு சுவர் விளம்பரங்கள்தான் வரைகிறார்கள் என்று நினைத்தால், அவர்கள் அதை வரைந்து முடித்தபோது அத்தனையும் மனிதர்களின் அன்றாட வாழ்வைச் சித்தரிக்கும் நவீன ஓவியங்கள்!

ரெட்டை ஜடையுடன் பள்ளி செல்லும் சிறுமி, குங்குமப் பொட்டு வைத்து தலை நிறைய பூச்சூடி நிற்கும் ஒரு பெண்மணி, அலுவலகம் செல்லும் தோரணையுடன் ஓர் ஆண் என ஓவியங்கள் கண்ணைப் பறிக்கின்றன. ஓவியத்தில் தெரியும் அத்தனை பேர் முகங்களிலும் குறுஞ்சிரிப்பு; வாழ்க்கை தந்த மகிழ்ச்சி! கோவை மாநகரத்து சாலைகளைக் கடக்கும் யாரும் இந்த ஓவியங்களை நிமிர்ந்து பார்க்காமல் செல்வதில்லை. அப்படிப் பார்ப்பவர்களுக்குள், ஓவியத்தின் தலைப்பில் தெரியும் ‘இன்று நமதே’ என்ற வாசகம் தன்னாலேயே தன்னம்பிக்கையைப் படரவிடுகிறது.

கோவை மாநகரில் மட்டும் ஏழு பெரிய கட்டிடங்களில் இந்த ஓவியங்கள் பளிச்சிடுகின்றன. சாரத்தில் ஏறி நின்று இந்த ஓவியங்கள் அனைத்தையும் வரைந்தது திருநங்கைகள். இதைக் கேட்டபோது நானும் சற்று வியந்துதான் போனேன். திருநங்கைகள் எதற்காக இந்த வண்ண ஓவியங்களைத் தீட்ட வேண்டும், அதற்காக கோவையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த ஓவியங்களுக்கும் என்னதான் சம்பந்தம்? என்ற கேள்விகள் என்னைத் துரத்த, திருநங்கைகளுக்கு ஓவியங்கள் வரைய உதவிபுரிந்த கோவை ஓவியர் ஜீவாவிடம் பேசினேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in