அச்சம் தந்த அழையா விருந்தாளிகள்!- கொண்டாட்டம் ப்ளஸ் திண்டாட்டம் கோத்தகிரி

அச்சம் தந்த அழையா விருந்தாளிகள்!- கொண்டாட்டம் ப்ளஸ் திண்டாட்டம் கோத்தகிரி

கா.சு.வேலாயுதன்

ஒரே சமயத்தில் ஐம்பது அறுபது காட்டு மாடுகள் காடுகளை விட்டு ஊருக்குள் வரிசை கட்டினால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் அப்படியொரு கண்கொள்ளாக் காட்சியை தரிசனம் செய்திருக்கிறார்கள் கோத்தகிரி அருகே உள்ள அணையட்டி மின்வாரிய குடியிருப்புவாசிகள்!

அத்தனையும் பெரிய பெரிய காட்டு மாடுகள். கூடவே அவை ஈன்ற கன்றுகள். ஒரு கன்று தன் தாய்மீது ஏறிக் குதித்து விளையாடுகிறது. இன்னொன்று வாஞ்சையுடன் தன் அம்மா முகத்தை நக்கிக் கொடுக்கிறது. இன்னும் சில கன்றுகள் அம்மாக்களின் மடியை முட்டிமுட்டி அழகாய் பால் குடிக்கின்றன.

சோலோவாக வந்த மாடுகள் அக்கம்பக்கம் தெரிந்த காய்கறித் தோட்டங்களை ஒரு கை பார்க்கின்றன. இன்னும் சில மாடுகள் உண்ட மயக்கம் போக அப்படியே கொஞ்சம் ரெஸ்ட்டைப் போடுகின்றன. இத்தனை காட்சிகளும் அங்கே அரங்கேறி இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in