இனிமே இந்த மண்டபம்தான் எங்க வீடு- ரஜினியின் பெற்றோருக்கு மணி மண்டபம் கட்டிய ரசிகர்!

இனிமே இந்த மண்டபம்தான் எங்க வீடு- ரஜினியின் பெற்றோருக்கு மணி மண்டபம் கட்டிய ரசிகர்!

அ.வேலுச்சாமி

ஊரெங்கும் தேர்தல் திருவிழாவுக்காகக் கொடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அத்தனை அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் ஆர்ப்பாட்டமாய் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் திருவிழாவைக் கொண்டாட. ஆனால், இப்போதாவது வந்துவிடுவாரா என எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் அமைதியாக அடக்கி வாசிக்கிறார்.

இந்தச் சூழலில், ‘மார்ச் 25... திருச்சி வரத் தயாராகுங்கள்..!', ‘திருச்சியில் ஓர் நாச்சிக்குப்பம்', ‘குலசாமி திருவிழா... கூடுவோம் திருச்சியில்..!', ‘தலைவருக்கு தாய்வீட்டு சீதனம்' இப்படியான வாசகங்களைக் கடந்த சில தினங்களாக ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். என்ன ஏதென்று விசாரிக்கப் போனால், “திருச்சியில் நடிகை குஷ்புவுக்குக் கோயில் கட்டிய ஊருக்குப் பக்கத்தில் ரஜினியின் பெற்றோருக்கு மணி மண்டபம் கட்டியிருக்கிறார் ஒரு ரஜினி ரசிகர். அதன் திறப்பு விழாவைக் கொண்டாடத்தான் இந்த அழைப்புகள்” என்றார்கள்.

திருச்சி கே.கே.நகருக்குப் பக்கத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில்தான் எழும்பியிருக்கிறது அந்த மணி மண்டபம். சுமார் 1,800 சதுர அடி இடத்தில் பூச்செடிகள், புல்தரைகள் எனப் பசுமை சூழ அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தில் ரஜினியின் தாய் சௌ.ராம்பாய், தந்தை ரானோஜிராவ் ஆகியோரின் மார்பளவு சிலைகள் வெண்கலத்தில் வைக்கப்படுகின்றன. அருகிலேயே சின்னதாய் சிவலிங்கம் ஒன்றும்  பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நாம் போன போது இறுதிக்கட்ட கட்டுமான பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார் ரஜினி ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in