ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்... உதயநிதி!

ஆக்‌ஷன்... ரியாக்‌ஷன்... உதயநிதி!

கா.சு.வேலாயுதன்

அரசியலில் ஒத்திகை இல்லாமல் ஒரே டேக்கில் ‘ஓகே’ வாங்கிவிடுவார் போலிருக்கிறது உதயநிதி ஸ்டாலின். கோவையில் அவர் கலந்துகொண்ட நூலகத் திறப்பு விழாவையொட்டி நடந்த நிகழ்வுகள் அப்படித்தான் எனக்குச் சொன்னது.

கோவையில் இயங்கிவந்த மாநகர திமுக அலுவலகத்தில் இப்போது ‘முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞர் நூலகம்’ திறந்திருக்கிறார்கள். கடந்த 2-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் இதைத் திறந்துவைத்தார்.  நூலகத்தைத் திறந்துவைத்த கையோடு அங்கிருந்த கருணாநிதி படத்துக்கும்  குத்துவிளக்கேற்றினார்.

அடுத்த சற்று நேரத்திலேயே, கருணாநிதியின் படத்தருகே மாட்டப்பட்டிருந்த உதயநிதியின் படத்தை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், ‘எந்தப் பொறுப்பில் இருக்கார்னு இவரோட படத்தை கட்சி அலுவலகத்தில் வெச்சிருக்கீங்க... உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லாம போயிடுச்சு’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு உடனடியாக பதில் கொடுத்த உதயநிதி, ‘‘ அது கட்சி அலுவலகம் அல்ல; நூலகம். என்றாலும்கூட அங்கே என்னுடைய படத்தைப் பார்த்ததுமே எடுக்கச் சொல்லி விட்டேன்; அவர்களும் எடுத்துவிட்டார்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in