கோவிலூரும் செட்டிநாட்டு அருங்காட்சியகமும்!

கோவிலூரும் செட்டிநாட்டு அருங்காட்சியகமும்!

கே.கே.மகேஷ்

மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் ஒவ்வொரு முறையும், கோவிலூரில் இறங்கத் தோன்றும். சாலையை ஒட்டியே உயர்ந்து நிற்கும் தேர்போன்ற இரு கட்டிடங்களும், தொலைவில் தெரியும் ராஜகோபுர முமே ஈர்ப்புக்குக் காரணம். ஆனால், இறங்க நேரம் வாய்த்ததேயில்லை.

சமீபத்தில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அய்யாவைச் சந்தித்தபோது, “கோவிலூரில் நகரத்தார் சமூகத்தினரின் வாழ்வியல், பண்பாட்டோடு தொடர்புடைய பொருட்கள் அனைத்தையும் கொண்டு ஒரு அருங்காட்சியகம் அமைத்திருக்கி றார்கள். இன்றைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய இடம். சாதி அமைப்புகள் எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பை விதைத்துக்கொண்டிருப்பதைவிட, இப்படித் தங்கள் சமூகம் சார்ந்த புழங்கு பொருட்களை சேகரித்து மாவட்டத்துக்கு ஒரு அருங்காட்சியகம் அமைத்தால், வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மிக முக்கியமான வேலையாக இருக்கும்” என்றார்.

அடுத்த வாரமே கோவிலூர் புறப்பட்டோம். அந்த இரண்டு ‘தேர்’களையும் கடந்து போனால், திருநெல்லை நாயகி உடனுறை கொற்றவாள் ஈஸ்வரர் கோயில். அதன் எதிரே நிறைந்து தளும்புகிற தெப்பக்குளம். ராஜகோபுரம் மட்டுமல்ல சுற்றி நிற்கிற தென்னை மரங்களின் பிம்பமும் தண்ணீரில் ஆடுவது தனியழகு. மதுரையைப் போலவே இந்தக் கோயிலைச் சுற்றித்தான் கோவிலூர் உருவாகியிருக்கிறது. வந்த வேலையை மறந்துவிட்டு கொஞ்ச நேரம் கோயிலையும், தெப்பக்குளத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in