உ.பி. உருவாக்கிய ‘மொய் டெக்’னிக்!

உ.பி. உருவாக்கிய ‘மொய் டெக்’னிக்!

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

உ.பி-யில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாஃப்ட்வேர் தென்தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது. இங்கே உ.பி என்று நான் சொல்வது நம்ம மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற உசிலம்பட்டியை!

மதுரை வட்டாரத்தில் பெரிய இடத்து கல்யாணம், காதுகுத்து, வசந்தவிழா என்று எங்கே போனாலும் ஆதார் கார்டுக்கு போட்டோ எடுப்பவர்கள் மாதிரி, நான்கைந்து பேர் லேப்டாப் சகிதமாக வாசலில் உட்கார்ந்திருக்கிறார்கள். கேட்டால், மொய் வசூலிப்பவர்கள் என்கிறார்கள். இதற்காகவே ஸ்பெஷல் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்திருக்கும் இவர்கள், மொய்ப்பணத்துக்குப் பில்லும் கொடுக்கிறார்கள். எல்லாம் முடிந்து பெட்டியைக் கட்டும்போது விசேஷ வீட்டுக்காரரிடம் ஊர், தெரு வாரியாகப் பிரித்து வசூலான மொய்ப்பட்டியலை பிடிஎஃப் ஃபார்மெட்டில் ஒப்படைத்து விடுகிறார்கள். தேவைப்பட்டால் ‘பென் டிரைவ்’விலும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in