அது ஒண்ணுமில்லைங்க சார்... அழுக்குத் தண்ணி..!- படம்காட்டிப் பதுங்கிய (டி)ராமர் பிள்ளை

அது ஒண்ணுமில்லைங்க சார்... அழுக்குத் தண்ணி..!- படம்காட்டிப் பதுங்கிய (டி)ராமர் பிள்ளை

சிபிஐ விசாரணை வரைக்கும் சென்று வந்த ராமர் பிள்ளை மீண்டும் செய்திகளில்... கோடம்பாக்கத்தில் வசிக்கும் அவரைச் சந்திக்கப் போனேன். “டீ சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்று டீ வாங்கித் தந்தவர், “அண்ணே அக்கவுன்ட்டுல வெச்சுக்குங்க” என்று சொல்லிவிட்டு “இந்தப் பாலில் இருந்தும் என்னால பெட்ரோல் தயாரிக்க முடியும்...” என்று சொல்ல டீ மாஸ்டர் அவசரமாகப் பால் குண்டானை மூடிவைத்து முறைக்கிறார். அக்கம்பக்கம் இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை போலிருக்கிறது. சாதாரணமாக ‘டீல்’ செய்கிறார்கள். ஒருகாலத்தில் எப்படி இருந்தவர் தெரியுமா ராமர் பிள்ளை?

வில்லிப்புத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோல் மூலம் அகில உலக ஃபேமஸ்(!) ஆனவர். 1996-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி. அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தனது மூலிகை பெட்ரோலை ‘டெமோ’ காட்டினார் ராமர் பிள்ளை. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றியவர் அதில் மூலிகை திரவம் என்று சொல்லி ஆறு சொட்டுகளை விட்டார். கூடவே, அதில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கலக்கினார். கருணாநிதியே வியப்புடன் பார்க்க, அமைச்சர் ஆற்காடு வீராசாமி அதிலிருந்து சில சொட்டுகளை ஒரு காகிதத்தின் மீது ஊற்றி, பற்றவைக்க குப்பென்று பற்றி எரிந்தது காகிதம். பகுத்தறிவாளரும் அறிவியலை நம்புபவருமான கருணாநிதியையே கண்ணைக் கட்டிய தருணங்கள் அவை!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.