ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள்... படக்குழு வெளியிட்ட புது அப்டேட்!

ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர்
ஜெயிலர் படத்தின் புதிய போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படத்தின் காவாலா, ஹூக்கும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, இணையத்தில் பல புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு காண்பதற்கு ஆயிரம் ரசிகர்களுக்கு இணையம் வழியாக பாஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், வெறும் 15 நொடிகளுக்குள்ளாக அனைத்து பாஸ்களும் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் படத்தின் 3வது சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜூஜூபி என்ற அந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஆகஸ்டு 10ம் தேதி திரைக்கு வரவுள்ள இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உலகம் எங்கும் எகிறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in