கீழடியில் இரும்புப் பொருட்கள் கண்டெடுப்பு: கி.மு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதா?

கீழடியில் இரும்புப் பொருட்கள் கண்டெடுப்பு: கி.மு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியதா?

கீழடி எட்டாம் கட்ட அகழாய்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பெரிதும், சிறிதுமாக மூன்று இரும்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கீழடியில் 5 குழிகள் தொண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில், ஒரு குழியில் சுமார் நான்கு அடி ஆழத்தில் தோண்டும் போது பெரிதும், சிறிதுமாக 3 இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் நம் முன்னோர்கள் கி.மு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உருக்காலைகள் மூலம் இரும்பை உருக்கிப் பல்வேறு பொருட்களாகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது. தொடர்ந்து, இந்த இரும்புப் பொருட்களை ஆய்வு செய்யும் பட்சத்தில் இதனுடைய முழு விவரங்களும் தெரியவரும் என்கின்றனர் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள்.

இதனைத் தொடர்ந்து கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in