தொல்லியல் பார்வை: கழுகுமலை வெட்டுவான் கோயில் 

தொல்லியல் பார்வை: 
கழுகுமலை வெட்டுவான் கோயில் 
RAMESH M

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை உள்ளது பேரூராட்சி். இங்குள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில் தான் நீங்கள் இந்த ஆல்பத்தில் பார்ப்பது. ஊருக்கு வெளியே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது கழுகுமலை. இந்த மலையின் பெயரே ஊருக்கும் அமைந்துபோனது.

கழுகுமலை வெட்டுவான் கோயில் திராவிடக் கட்டிடக் கலையைப் பயன்படுத்தி கி.பி. 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மலையைக் குடைந்து செதுக்கப்பட்டது. சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாகக் காணப்படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமலே நிற்கிறது. கோயிலின் கருவறையில் தற்சமயம் ஒரு விநாயகர் சிலை மட்டுமே உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in