தொல்லியல் பார்வை

பாதாமி குடைவரைக் கோயில்
பாதாமி குடைவரைக் கோயில்
பாதாமி குடைவரைக் கோயில்RAMESH M

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி குடைவரைக் கோயில்களுக்கு பிரசித்திபெற்ற ஊர். முற்காலச் சாளுக்கிய வம்சத்தின் முதலாம் புலிகேசியால் இந்த நகரம் தலைநகரமாக உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். முதலாம் புலிகேசியின் புதல்வர்களான கீர்த்திவர்மனும் மங்களேசனும் தான் இந்தக் குடைவரைக் கோயில்களின் பிதாமகன்கள். கி.பி 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இங்குள்ள குடைவரைக் கோயில்கள் எழுப்பப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வர்கள்.

மணற்கல் குன்றுகளில் இந்தக் குடைவரைக் கோயில்கள் குடையப்பட்டுள்ளன. மன்னன் மங்களேசனால் கி.பி. 578-79-ல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தக் குடைவரைக் கோயிலானது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகமாக ஈர்த்துவரும் பாதாமியில், பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் சாளுக்கியர் காலத்து கலைப்படைப்புகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. கட்டாயம் ஒருமுறை போய்வாருங்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in