தொல்லியல் பார்வை

லக்குண்டி காசி விஸ்வேஸ்வரர் கோயில்
தொல்லியல் பார்வை
RAMESH M

கர்நாடக மாநிலம், கட்டாக் மாவட்டத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறு ஊர் லக்குண்டி. இங்குள்ள இந்தக் காசி விஸ்வேஸ்வரர் கோயில், 11-ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட அற்புதமான கலைப் படைப்பு.

சிவனுக்கும் சூரிய தேவனுக்கும் சேர்த்துக் கட்டப்பட்ட இரட்டைக் கோயில் இது. கல்யாணி சாளுக்கிய கட்டிடக் கலையின் சிறப்பு அம்சங்களுடன் கூடிய மண்டபம் மற்றும் வட்டத் தூண்களை இங்கே காணலாம்.

கோயிலின் சுற்றுச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலைப்பாடுகள் வேறு எங்கும் காணக் கிடைக்காதவை. மலர்க்கொடியில் பின்னிப்பிணைந்த கின்னரர்கள், யட்சிகள், கட்டைவிரல் அளவே உள்ள நுட்பமான மோகினி உள்ளிட்ட பல சிற்பங்களை இங்கே பார்க்கலாம்.

லக்குண்டி, ஒருகாலத்தில் வர்த்தக நகரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வர்கள். இப்போது சிறு கிராமமாகச் சுருங்கிவிட்டாலும் இங்கே சுமார் 10-க்கும் அதிகமான கோயில்களைப் பார்க்கமுடிகிறது. அதில் 2 கோயில்கள் மிக முக்கியமானவை. ஒன்று, இந்தக் காசி விஸ்வேஸ்வரர் கோயில். மற்றொன்று, பிரம்மா ஜீனாலயம்

தற்போது, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் கோயிலில் பார்க்க வேண்டிய அற்புதங்கள் நிறையவே இருக்கின்றன. அதில் குறிப்பாக, கோயிலின் வாசல் கதவில் இருக்கும் எண்ணற்ற குறுமல சிற்பங்களைச் சொல்லலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in