இவர்களைதான் அதிகமாக டெங்கு காய்ச்சல் தாக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்திலேயே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியது. தற்போது, டெங்கு பரவல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், யாரை டெங்கு காய்ச்சல் அதிகம் தாக்குகிறது என்பதை அறிய நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என தெரிய வந்துள்ளது. வாராணசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இதேபோல் அமெரிக்கன் சொசைட்டி ஆப் டிராபிக்கல் மெடிசின் மற்றும் ஹைஜின் வெளியிட்ட ஆய்வின்படி 2020 ஆண்டிற்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் கொரோனா தாக்குதலைவிட, டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு அதிக விகிதத்தில் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து, ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் முன்னிலையில், ஆய்வக செல்களை டெங்கு வைரஸ் எளிதில் தாக்கியதும் தெரியவந்தது.

இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்பு அதிகம் என்று முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in