
மதுரை இராசாசி மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணிகள் உயிரிழந்ததற்கு அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதே காரணம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.
மேலும், கர்ப்பிணி பெண்கள் மரணம் குறித்த சம்பவங்களில் முறையான நீதி விசாரணை செய்யவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாத வண்ணம் தகுந்த மருத்துவ பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மருத்துவ அறிக்கைகள் கிடைத்திருப்பதாக இன்று தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கர்ப்பிணிகள் இருவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. 2021 22-ல் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 90 என இருந்த தாய் மரணவிகிதம் தற்போது 52 ஆக குறைந்திருப்பதாக கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்