இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்… வேகமெடுக்கும் நிபா வைரஸ்!

புதுவையில் முகக்கவசம் கட்டாயம்
புதுவையில் முகக்கவசம் கட்டாயம்

நிபா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி மாஹே பிராந்தியத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து எல்லைப் பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஹே பிராந்திய நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக்கவசம்
முகக்கவசம்

வழிபாட்டுத் தலங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்க்கக் கூடாது, காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களைத் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே போல், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in